×

இயற்கை வாழ்வியல் தமிழ் மருத்துவ கருத்தரங்கு: சிறந்த நிறுவனங்களுக்கு ஆளுநர் விருது

சென்னை: புதுச்சேரியில் உள்ள செண்பகா ஓட்டல் மற்றும் மாநாட்டு மையத்தில் இயற்கை வாழ்வியலும் தமிழ் மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை சித்வா ஹெர்பல் புட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. சித்வா குரூப்ஸ் ஆப் கம்பெனியின் நிறுவனர் டாக்டர் விஜயராகவ் வரவேற்றார். புதுச்சேரி சித்தா யுனானி ஹோமியோபதி ஆயுர்வேதா மருந்து உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனரும், புதுவை, தமிழகத்தில் உள்ள தி சுசான்லி குழுமத்தின் நிறுவனர் சேர்மேனுமான சுசான்லி டாக்டர் ரவி, இந்திய மருத்துவ முறையின் மாநில இயக்குனர் தரன், மாநில மருந்து கட்டுபாட்டு மற்றும் உரிமம் வழங்கல் அதிகாரி அனந்தகிருஷ்ணன், அரியானாவிலிருந்து சுமன்ட் விர் கபூர், புதுச்சேரி சித்த மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, ஊடகவியலாளர் ஆசைத்தம்பி, மை வீத்ரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆளுநர் பேசும்போது, சித்வா நிறுவனம் பண்டைய கால மருந்துகளை உணவாக கொடுப்பது பாராட்டத்தக்கது என்றார். நிறுவனர் விஜயராகவ் பேசும்போது, இன்னும் இதுபோன்ற பாரம்பரிய உணவு சார்ந்த பொருட்களை அதிகமாக ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன் உள்ளதாக தரவேண்டும் என்றார். விரைவில் மூலிகை நூடுல்ஸ் போன்றவையும் வருவதாக சுசான்லி ரவி தெரிவித்தார். இந்நிகழ்வில் மை வீத்ரி ஆட்ஸ் நிறுவனத்திற்கு ”BEST HEALTH CARE ORGANISATION” என்ற விருது வழங்கப்பட்டது.

The post இயற்கை வாழ்வியல் தமிழ் மருத்துவ கருத்தரங்கு: சிறந்த நிறுவனங்களுக்கு ஆளுநர் விருது appeared first on Dinakaran.

Tags : Natural Biology Tamil Medical ,Chennai ,Chenpaka Hotel ,Center ,Puducherry… ,Medicine ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...